- திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது.
- திருக்குறள் முதன் முதலில் 1812 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
- திருக்குறளின் முந்தைய பெயர் "முப்பால்".
- திருக்குறள் 133 அத்தியாயங்களைக் கொண்டது.
- ஒவ்வொரு அத்தியாயத்திலும் 10 குறள்கள் இருப்பதால் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
திருக்குறளில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன அவை :
1.அறத்துப்பால் - 380 குறள்கள்(1-380)
2.பொருட்பால் - 700 குறள்கள்(381-1080)
3.காமத்துப்பால் - 250 குறள்கள்(1081-1330)